வெள்ளி, 19 டிசம்பர், 2008

எண்ணத்தில்

என்னிலும், எண்ணத்திலும்
நீயே நின்று என்றும் நீங்காதிருப்பதால்
எண்ணம் அது வண்ணமிகு
வஞ்சி மகள் தங்க தமிழை
தாவி பிடித்து வாரி அணைத்தால்
வந்து விழும் வார்த்தையெல்லாமே
வர்ண ஜாலம் காட்டும்மடி என் கண்ணே
கண் காண காட்சி இல்லை
காணாத ஒளி இன்றி
கல்லில் சிலை பிறப்பதில்லை
கை கொள்ளும் உளி இன்றி
எந்தன் எண்ணம் ஒளிர்ந்ததில்லை
என்னில் நீயின்றி
எண்ணம் நீயாய் இரு
எழுத்தும் நீயாய் இரு
நானும் நீயாய் ஆனால்
நான் அடைவேன் சொர்க்கத்தையே...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª