ஞாயிறு, 21 டிசம்பர், 2008

கற்பனைக்கரு

கற்பனையின் கருவாய் நீயானால்
கவிதையின் உருவாய் காதல் பிறக்கும்
கருவாய் உருவாய் பிறந்த காதல்
பிள்ளையாய் நம்மை பெற்றெடுக்கும்
பிறந்த பிள்ளை என்றில்லாமல்
பேயாட்டம் நம்மை ஆட்டிவைக்கும்
ஆட்டியே வைத்தாலும் ஆயுள் வரை
அன்பால் அடக்கி வைக்கும்
அடக்கியே வைத்தாலும் அன்றாடம்
ஆசைகொண்டு அணைக்க வைக்கும்
அணைக்க வைத்தே ஆடை அபகரிக்கும்
ஆடை இழந்தாலும் அழகு பார்க்கும்
அழகு பார்த்தே நம்மை அடிமை ஆக்கும்
அடிமை ஆக்கி நம்மை அரசாலும்
அரசாண்டாலும் நம் சேவகம் செய்யும்
சேவகம் செய்தே நம்மை சேவிக்க செய்யும்
சேவிக்க செய்தே நம் ஜீவன் சிறக்க செய்யும்
ஜீவன் சிறக்க செய்யதே ஜென்மம் தரும்
ஜென்மம் தந்தே நம்மை சேர்த்து வைக்கும்
சேர்த்து வைத்தே ஆயுள் துன்பம் தரும்
இத்துன்பம் தந்தே நம் இன்பம் பெருக்கும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª