குளம் எழும் அலை எண்ணம்
அலை எழும் குளம் உணர்வு
அலையும் எண்ணம் அடங்கிப்போகும்
உணர்வு என்றும் ஒடுங்காது
உணர்வும் உயிரும் வெவ்வேறோ
எண்ணம் ஒன்று எழும்பி ஓட
உயிரும் உணர்வும் வேறென்றால்
நீயும் நானும் வேறு அன்றோ
உயிராய் உணர்வாய் விலகி நின்றேன்
உயிராய் என்னை உணரவில்லை
உணர்வாய் நானும் உயிர்க்கவில்லை
உயிரும் உணர்வும் ஒன்றாகி
உணர்ந்து கொண்டேன் ஒன்றென்றே
உயிரும் உணர்வும் அதுபோல
உன்னில் நானும்
என்னில் நீயும் ஒன்றானோம்
அடங்கும் அலை தான் போல
நம்மில் நாம் அடங்கி என்றும்
ஒடுங்கா உணர்வு குளம் ஆனோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக