செவ்வாய், 23 டிசம்பர், 2008

உன்னை பிரிந்த நேரம்

உன்னை பிரிந்து வந்தபின்னே
கடந்த நாட்கள் ஒன்றும் அதிகமில்லை
ஒவ்வொரு நாளும் ஒரு யுக நீளம்
மணி நேரம் அதிகமில்லை
காலம் நேரம் கடப்பதில்லை
கடிகாரமும் சுழல்வதில்லை
நிமிடம் கூட நீளமல்ல
நடக்கும் சக்தியற்று நட்டமாய் நிற்குதடி
நொடிக்கும் நேரம் தான் மறந்து
துடிக்கும் நொடி முள்ளும்
தொண்டை வரை குத்துதடி
குருதி தினம் குடிக்குதடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª