வந்து பிறந்தானோ ???
வெறும் வருடம் நாம் கணக்கிடவே
வந்து பிறந்தானோ ???
வெறும் நாட்காட்டி நாம் கிழித்திடவே
வந்து பிறந்தானோ ???
நமக்காய் வருந்தி தன்னுயிர் விட்டிடவே
இல்லையென்று என்றும் சொன்னோம்
இருப்பதில்லை அவன் சொன்னதுபோல்
தன்னுயிர் போலே இன்னுயிர் எல்லாம்
கருதிடுவோம், காத்திடாமல் போனாலும்
கருகிடும் உயிர் கண்டும் கண்மூடி
கடக்கும் காட்டுமிராண்டி ஆகாமல்
மண்ணுயிர் எல்லாம் தன்னுயிர் போல்
மனிதம் மலர்ந்து மகிழ்ச்சி பிறக்க
பிறந்து வந்தான் பிள்ளையென
அவன் பிள்ளை தம் கைகளிலே ...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக