ஞாயிறு, 21 டிசம்பர், 2008

எண்ணம்

எண்ணத்தை தான் அடக்க
என்னத்தை நான் அடக்க
என்னதான் அடக்கினாலும்
எண்ணம்தான் அடங்கிடுமோ
எண்ணம் தான் அடங்கி விட்டால்
இயக்கம் தான் இருந்திடுமோ
இயக்கம் இல்லையென்றால்
ஏற்றம் தான் வந்திடுமோ
ஏற்றம் தான் பெற்றிடவே
சிறந்த எண்ணம் போற்றிடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª