வெள்ளி, 7 நவம்பர், 2008

புரியாத புன்னகை


சூம்பிய கால்களும்
ஏங்கிய கண்களும்
வலுவில்லா தேகத்தை
பளு தூக்கும் வலி கொண்டு
வயிற்றின் வலி போக்க
வாழ்வின் வழி தேட
கட்டைப்பலகை மேல் கை கொண்டு
வழியெங்கும் வந்து போகையிலும்
புரியாத புன்னகை !
புரிகின்றானோ ஆண்டவன் ???
இறைந்திருக்கும் குப்பையில்
கடந்தவர் கருணையும், கண்ணீரும்
கலந்திருக்கும் காரணத்தினாலோ ???
கடந்தவர் எல்லாம்
கல் நெஞ்சரும் இல்லை
காசிட்டவர் எல்லாம்
கருணை நிறைந்தவரும் இல்லை
என்னும் கர்மம் அறிந்ததாலோ???
கடவுளுக்கும் காரணக்காரனுக்குமே வெளிச்சம்...

1 கருத்து:

  1. பாலா அருமை. கவிதை எழுதிய பின் தான் தேடினேன் இந்த புகைப்படத்தை கூகிள் இல் ஆனால் ஆனால் புகைப்படத்தை பார்த்த பின் இன்னும் வலி கூடியதே தவிர குறையவில்லை இன்னும் ஒன்று எழுதலாம் என்றுள்ளேன். உங்கள் வரிகள் அருமை அம்மா, தளிர் மங்கை, நம் காதல்.... நிறைய எழுதுக!!

    பதிலளிநீக்கு

ª