செவ்வாய், 4 நவம்பர், 2008

அம்மா உன்னோடு

சென்ற அன்னையர் தினம், சிறிதாய் ஒரு சுழல் காற்றையும் வீசி என்னை சிறிது கலங்கடித்தும் சென்றது. அன்னையர் தினம் இரவு வரை என் அம்மாவை அழைக்காததுதான் காரணம். அயல் நாட்டினர் அன்று தான் அம்மாவையும், ஒவ்வொரு நாள் வைத்து அன்று அப்பாவையும் மற்றவற்றையும் நினைக்கிறார்கள் நாம் அப்படியா? பிறகு என் அம்மாவின் செல்ல கோபம் போக்க பின் வரும் என் சின்ன கவிதையை அல்லது கவிதை என நான் நினைப்பதை இரவு 11. 30 pm போல் என் நண்பனிடம் கொடுத்தனுப்பி சமாதானம் செய்தேன்.

அன்னையர் தினம்,
அன்னை அவள் அருமை உணர்த்த!
அன்பெனும் அருமை நீ
அம்மா என்பதாலே
நின்னை நினைவில் நினைத்தாலே
உதடு மட்டுமல்ல, உயிரும் ஒட்டி
உன்னை உணர்வில் நிறைத்திடுமே
முன்னூறு நாளில் முளைத்த என்னை
பிள்ளையென பெற்றெடுத்து
பிறவி மீண்டும் நீ எடுத்தாய்
பிறந்தாய் என்னோடு
பிறவியெல்லாம் நான் உன்னோடு...
பிறந்தேனோ அறியவில்லை
நீ கெட்ட பிள்ளையென
காத்திருந்தாய் கண் என
கண் முன் இருந்தும் கடவுள் என...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª