வெள்ளி, 7 நவம்பர், 2008

புரியாத புன்னகை


சூம்பிய கால்களும்
ஏங்கிய கண்களும்
வலுவில்லா தேகத்தை
பளு தூக்கும் வலி கொண்டு
வயிற்றின் வலி போக்க
வாழ்வின் வழி தேட
கட்டைப்பலகை மேல் கை கொண்டு
வழியெங்கும் வந்து போகையிலும்
புரியாத புன்னகை !
புரிகின்றானோ ஆண்டவன் ???
இறைந்திருக்கும் குப்பையில்
கடந்தவர் கருணையும், கண்ணீரும்
கலந்திருக்கும் காரணத்தினாலோ ???
கடந்தவர் எல்லாம்
கல் நெஞ்சரும் இல்லை
காசிட்டவர் எல்லாம்
கருணை நிறைந்தவரும் இல்லை
என்னும் கர்மம் அறிந்ததாலோ???
கடவுளுக்கும் காரணக்காரனுக்குமே வெளிச்சம்...

நம் காதல்

வலம் வைத்து வாழ்வில் வந்தாய்
வளம் நாளும் தந்திடவே
வசந்தம் நம் வழித்துணையாய்
வாழ்வெல்லாம் வரும் உடனே
தீராத தேன்அமுதாய் நீயிருப்பாய்
திகட்டாத தீஞ்சுவையில் நாளும்,
உன்னில் நான் புதைந்து
என்னில் நீ எழுவாய்
மகிழும் மனம் கொண்டே
கமழும் நம் காதல் தினம் தினம்...

உருகும் உயிர்

உடலால் உன்னை விட்டு

உணர்வால் எனை விட்டு

எண்ணம் அது எரியும் நெருப்பாய்

எலும்பு இல்லா எனதுயிரை

ஏனோ சுட்டு வதைக்குதடி

உருகும் உயிர் குளிர

உன் உஷ்ண உடல் கொண்டு

அணைப்பாய் என் ஆயுள் வரை

Casino means Cash No

Casino means Cash No
காசு வேண்டாமென்றாலும்
வேண்டுமென்றாலும் ஏமாந்து போக
வேலை வெட்டி இல்லையென்றாலும்
வெட்டியாய் வேளை இல்லாதாக்கவும்
வேறிடம் தேவையில்லை
பணப்பை வெற்றிடம் ஆகும்வரை
களிப்பில் இல்லாவிட்டாலும் பணக்கழிப்பில்
நாம் இருப்போம், அதிர்ஷ்டம் தான் நம்பி
அறிவிழந்து நாம் இருப்போம்
அறிந்து கொண்டேன் இதை நான்
ஆயிரங்கள் பல இழந்து, வேறொன்றும்
அதிர்ஷ்டம் என்பது என் அகராதியில் இல்லையென்றும்...

செவ்வாய், 4 நவம்பர், 2008

தளிர் மங்கை

சில்லிடும் குளிர்காற்று
சிறகடிக்கும் சிட்டுக்குருவி
பனித்துளி பாரமுடன் பச்சைப்புல்வெளி
உறையத்துடிக்கும் சிறு ஓடை
ஓடத்துடிக்கும் துளி தண்ணீர்
தனித்து வந்த என்னோடு
தளிர் மங்கை இணைந்து கொண்டு
இன்பம் தந்தாள், இயற்கை அவள்...

அம்மா உன்னோடு

சென்ற அன்னையர் தினம், சிறிதாய் ஒரு சுழல் காற்றையும் வீசி என்னை சிறிது கலங்கடித்தும் சென்றது. அன்னையர் தினம் இரவு வரை என் அம்மாவை அழைக்காததுதான் காரணம். அயல் நாட்டினர் அன்று தான் அம்மாவையும், ஒவ்வொரு நாள் வைத்து அன்று அப்பாவையும் மற்றவற்றையும் நினைக்கிறார்கள் நாம் அப்படியா? பிறகு என் அம்மாவின் செல்ல கோபம் போக்க பின் வரும் என் சின்ன கவிதையை அல்லது கவிதை என நான் நினைப்பதை இரவு 11. 30 pm போல் என் நண்பனிடம் கொடுத்தனுப்பி சமாதானம் செய்தேன்.

அன்னையர் தினம்,
அன்னை அவள் அருமை உணர்த்த!
அன்பெனும் அருமை நீ
அம்மா என்பதாலே
நின்னை நினைவில் நினைத்தாலே
உதடு மட்டுமல்ல, உயிரும் ஒட்டி
உன்னை உணர்வில் நிறைத்திடுமே
முன்னூறு நாளில் முளைத்த என்னை
பிள்ளையென பெற்றெடுத்து
பிறவி மீண்டும் நீ எடுத்தாய்
பிறந்தாய் என்னோடு
பிறவியெல்லாம் நான் உன்னோடு...
பிறந்தேனோ அறியவில்லை
நீ கெட்ட பிள்ளையென
காத்திருந்தாய் கண் என
கண் முன் இருந்தும் கடவுள் என...

திங்கள், 3 நவம்பர், 2008

கலை காட்சி


என்ன ஆயிற்று எனக்கு
ஏதும் அறியவில்லை, அறிவிலும் ஏதும் இல்லை
காணும் அனைத்திலும் காட்சி மட்டும் அல்ல
சில கருத்தும், காண உருவும்
கன்னி மாதாவும், கர்த்தராம் இயேசும்,
போதித்த புத்தரும், பெயரில்லா பெரியவரும்
இதைத்தான் கலை கண் என்றனரோ ???

மழை நீர்

பருவ மழை வந்துவிட்டால்
என் பருவம் குறைந்து போகும்
பருமனும் சற்று கரைந்து போகும்
மழையோடு மனம் மகிழ்ந்திருக்கும்
கவலையெல்லாம் சற்று கவிழ்ந்திருக்கும்
தேவைக்கு வந்துவிட்டாள் தேவி அவள்
தேங்காமல் வந்துவிட்டாள் மூதேவி ஆவாள்
மழையோடு நனைய மறுத்தாலும்
யாரும் அணை கொண்டு
அவளை அணையை மறுத்ததில்லை
ª