வித்தென விழுந்த என்னை
முத்தென மூடி விளைவித்தாய்
கடல் கொண்ட சிப்பி நீ அல்ல
பனிக்குட போர்வையிலே
கருவறை கடல் நீ கொண்டாய்
உடல், உதிரம், உயிர்
உன்னால் நான் பெற்றேன்
உயிர் வாழ நான் உரு பெற
உதிரம் உட்புகுத்தி, ஊன் அளித்தாய்
சித்தம் முழுதும் எனைத்தாங்கி
பித்தம் பிற பிணியாவும் இன்றி
என்னுயிர் தான் காக்க
இன்னுயிர் நீ நொந்தாய்
அன்பெனும் அரண் கொண்டு
அல்லல் அனைத்தும் நீ களைந்தாய்
பிள்ளை நான் உனக்கு
பிறவி அது ஒழியும் வரை எனும்
பெரு வரம் தான் தருவாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
really superb....keep it up nanba...
பதிலளிநீக்குநல்ல பொலிவான முகப்புடன் புதிய வலைப்பூ. வரவேற்கிறோம். அம்மாவில் ஆரம்பித்த பாங்கு அருமை. கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
one suggestion: pls remove the word verification while posting comment, it becomes tedious job.
Thank you, Renga
பதிலளிநீக்கு