புதன், 12 செப்டம்பர், 2012

வரம் வேண்டும்...

காலையில்  எழுந்து சரிவர கடனும் ஆற்றாது

கைதொழும் கடமையும் ஆற்றாது

களைப்பும் கவலையும் கண்ணைவிட்டுப் போகாது

பணிவுடன் பணி விரும்பாது பழித்துச் சென்று

பற்றும் அறிவு பற்றாது, பாவம் தொற்றும்

பலவற்றிலும்  பயனற்று போனேன்

பசிக்கையில் உணவு, பார்வையில் பரிவு

வேண்டும் போது உறக்கம், விரும்பும் போது விழிப்பு

வேட்கையில் உறவு, வேண்டுமதில், உன்னத உணர்வு

உள்ளும்  புறமும்  ஒளி சூழ

காதலும் கருணையும் கண்ணில் பொங்க

மண்ணில் மனிதனாய் வாழ வரம் வேண்டும்...

இறைவா நீ என்னுள்  வா  வா ....




புதன், 20 ஜூன், 2012

கருவும் உயிரும்


கருவும் உயிரும் கலந்து
உருவம் உணர்வு தந்த உறவு நீ
பிண்டத்தை பிள்ளையாக்கி
உதிரம் உணவாக்கிய உன்னதம் நீ
முப்பருவம் வயிற்றில்
மூப்பிலும் மனதில் சுமந்து 
சுகிக்கும் சுமைதாங்கி நீ
மலம் ஜாலம் கழித்தாலும் 
மகிழ்ந்து நீ இருந்தாய் 

உன் அருமை உணராமல்
உன் பெருமை போற்றாமல் 
உன் அடி தொழாமல்
வீண்வாதம் பேசிட்டேன், ஏசிட்டேன்
மரியாதை வார்த்தையில் இல்லை
மகனென்ற தாழ்மை இல்லை
மனதில் ஏதோ கொஞ்சம் பாசமுண்டு 
நான் இன்றி நான் துடிப்பேன் 
நீயின்றி வரவில்லை
நீயின்றி நான் பிரியேன்
பணிவிடை செய்ததில்லை
பணிவுடன் இருந்ததில்லை
தொழுது இருந்ததில்லை
தொண்டும் நான் செய்ததில்லை
தொலைவில் இருந்தாலும் 
துடிப்பு மட்டும் இருக்கிறது 

மடியில் இருந்தவரை
மனதில் ஒரு களங்கமில்லை
கவனம் சிதறவில்லை 
கவலை சேரவில்லை
கனவில் தொல்லையில்லை
கண்ணில் ஒளி பொங்கும் 
உறங்கி எழுந்தால் புது தெம்பு வரும்
மீண்டும் மடிசேர்ந்து
கருவாகும் காலம் வேண்டும்
உன் தாயாகி சீராட்டும் 
வரம் வேண்டும் இல்லை
மீண்டும் நாம் பிறவாத
நிலை வேண்டும்
மகிழ்ந்தேன் உன் மகவாய் நான் ...

செவ்வாய், 5 ஜூன், 2012

தலை மயிராய் ஒரு வரம்

உன்னருகே நான் இருந்த ஓர் இரவு

உறக்கம் கலைந்தே உனைக் கண்டேன்

உறங்கும் குழந்தை உன் முகம்

உறக்கம் கலைக்கும் உன் தேகம்

இறுக எனைப்பற்றி மயிர்க்காட்டு மார்பில்

மலர் முகம் தான் புதைந்தாய்

சிணுங்கி அழும் சத்தம் கேட்டு

சிதறினேன் கண்ணகி காற்சிலம்பாய்...

கலக்கமுடன் காதல் முகம் கண்டேன்

குறுஞ்சிரிப்பு குழந்தை முகம்

சிதறிய நான் சிந்தித்தேன், சிந்தித்தேன்

சிணுங்கியது யாரென்று, யாரென்று

சின்னவள் சிரசில் முகம் புதைத்தேன்

உவமையில்லா உன் வாசம் கொண்டிடவே...

அதே அழுகுரல் அதிர்ந்துவிட்டேன்

மெல்லிய விளக்கிட்டு கேசம் விலக்கிட்டேன்

உதிர்ந்த தலைமுடி ஒவ்வொன்றும்

உலகம் முடிந்ததென ஒப்பாரி தான் வைக்க

அமைதியாய் அதட்டி சொன்னேன் அழுகை நிறுத்த

அழுது அவள் உறக்கம் கலைக்காதீர் என்றே

கணம் நிறுத்தி கவிழ்ந்த தலை நிமிர்த்தி

வெடித்து அழுதன ஆனாலும் அமைதியாய்

கலங்கியே போய்விட்டேன் கண்டதிலே

என்னவென்று கேட்கும் முன்னே

சொன்னவை எல்லாம் காரணமா? காதலா?

வருடம் பல வருந்தி வாழ்ந்திருந்து

வரம் வேண்டி, மாய உடல் விட்டு

மங்கை இவள் மயிர் ஆனோம்

உலகின் உயரிய இடம் பெற்றோம்

உன்னத நறுமணம் தான் பெற்றோம்

மகிழ்ந்திருந்தோம், மலர் தேகம் தன்னில்

எவரின் சாபமோ? அடைந்தோம் முக்தி

அரியவள் சிரசமர இழந்தோம் சக்தி

காலையில் கலைந்தெரிவாள் காற்றில்

உணர்வதில்லை அவள் எங்கள் உயிர்

அவளுக்கோ உதிர்ந்தது வெறும் தலை மயிர்

அழுது பயனில்லை, ஆண்டவன் தாழ் பணிவோம்

அருமையிவள் தலையிருந்து தவம் தான் இருக்க

கேட்டு முடித்த கணம் மாறிப்போகவிருந்தேன்

மங்கையிவள் மயிராய் நானும்...

கருவும் உயிரும்


கருவும் உயிரும் கலந்து
உருவம் உணர்வு தந்த உறவு நீ
பிண்டத்தை பிள்ளையாக்கி
உதிரம் உணவாக்கிய உன்னதம் நீ
முப்பருவம் வயிற்றில்
மூப்பிலும் மனதில் சுமந்து 
சுகிக்கும் சுமைதாங்கி நீ
மலம் ஜாலம் கழித்தாலும் 
மகிழ்ந்து நீ இருந்தாய் 

உன் அருமை உணராமல்
உன் பெருமை போற்றாமல் 
உன் அடி தொழாமல்
வீண்வாதம் பேசிட்டேன், ஏசிட்டேன்
மரியாதை வார்த்தையில் இல்லை
மகனென்ற தாழ்மை இல்லை
மனதில் ஏதோ கொஞ்சம் பாசமுண்டு 
நான் இன்றி நான் துடிப்பேன் 
நீயின்றி வரவில்லை
நீயின்றி நான் பிரியேன்
பணிவிடை செய்ததில்லை
பணிவுடன் இருந்ததில்லை
தொழுது இருந்ததில்லை
தொண்டும் நான் செய்ததில்லை
தொலைவில் இருந்தாலும் 
துடிப்பு மட்டும் இருக்கிறது 

மடியில் இருந்தவரை
மனதில் ஒரு களங்கமில்லை
கவனம் சிதறவில்லை 
கவலை சேரவில்லை
கனவில் தொல்லையில்லை
கண்ணில் ஒளி பொங்கும் 
உறங்கி எழுந்தால் புது தெம்பு வரும்
மீண்டும் மடிசேர்ந்து
கருவாகும் காலம் வேண்டும்
உன் தாயாகி சீராட்டும் 
வரம் வேண்டும் இல்லை
மீண்டும் நாம் பிறவாத
நிலை வேண்டும்
மகிழ்ந்தேன் உன் மகவாய் நான் ...

ஞாயிறு, 16 மே, 2010

எழுந்து வென்று விடு

எழும் நீ எழுந்திடு எழுச்சியோடு

இந்த நாள் இருக்கலாம் இறுதியாகவும்

உறுதியாக நீ இருந்தால் எப்போதும்

எதிர்கொள்ளடா எவனையும் எமனையும்

எவரும் உன்னை துன்புறுதட்டும் துரும்பென தூர போடு

துரும்பும் உன்னால் துன்புற வேண்டாம்

கடமை என்னவென்று கண்டு கொண்டு

கவலையெல்லாம் வென்று விடு

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

பைங்கிளி

நெஞ்சம் எல்லாம் நீயிருக்க
மஞ்சம் தன்னில் தீயிருக்க
தஞ்சம் வேண்டி தவித்திருக்க
பஞ்சம் போக்க பைங்கிளி நீ பறந்து வா !!!

வெள்ளி, 2 ஜனவரி, 2009

தனித்து தனியாய் நானில்லை

தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை
கடலின் அடியில் கட்டுண்டாலும்
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை

வானின் வெளியில் வீழ்ந்திருந்தாலும்
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை
சிந்தை எனை சிறை வைத்தாலும்
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை

எங்கு கொண்டு எனை அடைத்தாலும்
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை

எண்ணம் எல்லாம் எரிந்து போனாலும்
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை

உள்ளமதில் உறைந்து உயிராய் நீயிருக்க
உருவம் கூட தேவையில்லை
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை

என்னுள்ளே என்றும் என்னோடு நீயிருக்க
தனித்து நானிருப்பேன்
தனியாய் தான் இருப்பதில்லை

ª