புதிதாய் சொல்ல ஏதுமில்லை
புத்தி சொல்ல போவதில்லை
வந்து போகும் தோணல்களை
தோரண தோற்றம் கொண்டு
தொந்தரவு செய்திடவே
உங்களுடன் பகிர்ந்திடுவேன்.
அறுசுவை படைப்பதில்லை
ஆனால் ஒரு சுவை உண்டாகும்
இனித்திருந்தாலும், புளித்திருந்தாலும்
இளித்திருக்க வைத்தாலும்
கசந்து நான் போக மாட்டேன்
உள்ள சுவை என்னவென்று
உண்மையாக நீங்கள் உரைத்திருந்தால்...
வியாழன், 30 அக்டோபர், 2008
வியாழன், 16 அக்டோபர், 2008
அம்மா
வித்தென விழுந்த என்னை
முத்தென மூடி விளைவித்தாய்
கடல் கொண்ட சிப்பி நீ அல்ல
பனிக்குட போர்வையிலே
கருவறை கடல் நீ கொண்டாய்
உடல், உதிரம், உயிர்
உன்னால் நான் பெற்றேன்
உயிர் வாழ நான் உரு பெற
உதிரம் உட்புகுத்தி, ஊன் அளித்தாய்
சித்தம் முழுதும் எனைத்தாங்கி
பித்தம் பிற பிணியாவும் இன்றி
என்னுயிர் தான் காக்க
இன்னுயிர் நீ நொந்தாய்
அன்பெனும் அரண் கொண்டு
அல்லல் அனைத்தும் நீ களைந்தாய்
பிள்ளை நான் உனக்கு
பிறவி அது ஒழியும் வரை எனும்
பெரு வரம் தான் தருவாய்...
முத்தென மூடி விளைவித்தாய்
கடல் கொண்ட சிப்பி நீ அல்ல
பனிக்குட போர்வையிலே
கருவறை கடல் நீ கொண்டாய்
உடல், உதிரம், உயிர்
உன்னால் நான் பெற்றேன்
உயிர் வாழ நான் உரு பெற
உதிரம் உட்புகுத்தி, ஊன் அளித்தாய்
சித்தம் முழுதும் எனைத்தாங்கி
பித்தம் பிற பிணியாவும் இன்றி
என்னுயிர் தான் காக்க
இன்னுயிர் நீ நொந்தாய்
அன்பெனும் அரண் கொண்டு
அல்லல் அனைத்தும் நீ களைந்தாய்
பிள்ளை நான் உனக்கு
பிறவி அது ஒழியும் வரை எனும்
பெரு வரம் தான் தருவாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)